புதிருக்குள் செல்லும் முன்..
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!
குரு(க்கள்) வணக்கம்:
1) பிற கல்லூரி மாணவர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்குக் 'கட்டப்' பஞ்சாயத்து நடத்திய பூபேஷிற்கு.
2) நலம் விசாரிப்பது போல், கட்டமில்லாமல் ஓரிரு குறிப்புகள் கொடுத்து என்னைக் 'கட்டம்' கட்டும் வீருவிற்கு.
3) "நான் உன்கிட்ட நிறைய எதிர்பார்த்தேன்", என்று தான் 'கட்டிய' புதிரில் மாட்டிக்கொண்டு விழித்த என்னைக் குட்டிய சேரலிற்கு.
பின்னூட்டக் குறிப்பு:(about comments)
தாராளமாய் நீங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு குறிப்பையும் போடலாம்; சந்தேகங்களையும் கேட்கலாம். நான் 'தணிக்கை' செய்த பின், தனிப்பட்ட முறையிலோ அல்லது பின்னூட்டப் பகுதியிலோ பதில் அளிக்கிறேன். இதனால் மற்றவருக்கும் தொந்தரவு இல்லை, உங்களுக்கும் உதவியாய் இருக்கும்.
ஆபீஸ் செலவில் அச்செடுத்து, சாவகாசமாய் வீட்டில் அமர்ந்து விடையளிக்கும் வசதிக்கு இந்த இணைப்பு: (ஒரே தாளின் இரு புறங்களிலும் அச்செடுக்கும் நல்லோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்):
இனி..
இடமிருந்து வலம்:
1. தமிழ், संस्कृतं, తెలుగు, ಕನ್ನಡ எட்டிய தகுதி (4)
3. போதை மரம் (2)
4. தானே வரும் முன் அறிவிப்பு; சுய விளம்பரமன்று (3,4)
5. உச்சி வெயிலுக்கு உச்சியில் சோலை. குறிப்பு: ஆதியை நீட்டுக (6)
7. விகாரமில்லாத ஜென்மம் (2)
8. பாதுகாப்புக்கு உருவாக்கு (2)
10. ராமராஜன் கையில் இசைக்கும், விசைக்கும் (2)
11. நுனிப்புல் மேய்ச்சலால் நிறையவில்லை இந்தப் பாத்திரம் (5)
15. செடியில் வெடித்தது; அதில் பாதி முகத்தில் தெரியுது (2)
19. இனி இவர் ஸ்பெயினில் விளையாட மாட்டார் (3)
21. வசைப்பது தீனிப் பண்டாரம்! அசைப்பது? (6)
24. தகர வரிசையில் பணிப்பெண் (2)
மேலிருந்து கீழ்:
1. நீதிக் கம்பு; வளைந்தால் வம்பு (4)
2. சமையலில் ஒருவித மயக்கம் (3)
3. ஒரு கை சுழற்ற, ஒரு கால் சுழலும் (5)
4. புதியனவற்றில் வற்றாமல் (3)
6. முண்டாசுப் பாட்டு: கோதுமைக்கு இந்நதியில் இலை ஒன்றும் இல்லை (3,4)
12. தேர்வில் ஜெயம் எப்பொழுது? வள்ளுவ நெறியில் நிற்க. (3,2)
14. அரை நிர்வாணப் பக்கிரி "மாட்டேன்!" என்கிறார். (6)
15. அரிசில் என்னும் ஆறைக் கடந்தால் சேர்வோம் பழைய சோழர் தலைநகரம். (4)
18. அடிபட்டால் வலிக்கும், பூதங்களில் ஒன்றைப் போல (2)
20. பயணிக்கப் பயன்படும் (3)
21. திருவண்ணாமலை உள்ளே கிடைக்கும் நீர்த் துளி (3)
22. முக்கடவுள் கொள்கையில் முதல் கடவுள் (2)
வலமிருந்து இடம்:
9. கிலோ கிராம் வார இதழ், கண்டு கொள்ளாதீர்கள்! (2)
12. வரலாறு கூறும் அசைக்க முடியாத ஆதாரம்! (5)
13. ஏமாற்றுபவரே! ஏமாளியின் காதில் பெண்! (2)
14. பாட்டி முதல் பாக்யராஜ் வரை, கதையின் ஆரம்பம் (2)
16. நீதி நூல்கள் காட்டிய வழி (4)
17. கற்கால ஆடை, இலை! இக்கால ஆடை? (2)
23. பெரும்பாலான இஸ்லாமியக் கொடிகளில் காயும் (5)
25. அன்னக்கிளி கல்யாணத்தில் ஊருக்கே இந்த விருந்து (4,2)
கீழிருந்து மேல்:
7. மரத்தோடு ஒட்டிய உறவு (3)
13. உலகமயமாக்கலை முதல் அடியிலேயே சொன்ன சங்ககால ஜோசியர் மரியாதையின்றி (6)
17. நெல்லையப்பர் கோயில் அருகே, "விளக்கை அணை! கம்பெனி ரகசியம் தெரிஞ்சுரப் போகுது!" (5,2)