புதிருக்குள் செல்லும் முன்..
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!
குரு(க்கள்) வணக்கம்:
1) பிற கல்லூரி மாணவர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்குக் 'கட்டப்' பஞ்சாயத்து நடத்திய பூபேஷிற்கு.
2) நலம் விசாரிப்பது போல், கட்டமில்லாமல் ஓரிரு குறிப்புகள் கொடுத்து என்னைக் 'கட்டம்' கட்டும் வீருவிற்கு.
3) "நான் உன்கிட்ட நிறைய எதிர்பார்த்தேன்", என்று தான் 'கட்டிய' புதிரில் மாட்டிக்கொண்டு விழித்த என்னைக் குட்டிய சேரலிற்கு.
பின்னூட்டக் குறிப்பு:(about comments)
தாராளமாய் நீங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு குறிப்பையும் போடலாம்; சந்தேகங்களையும் கேட்கலாம். நான் 'தணிக்கை' செய்த பின், தனிப்பட்ட முறையிலோ அல்லது பின்னூட்டப் பகுதியிலோ பதில் அளிக்கிறேன். இதனால் மற்றவருக்கும் தொந்தரவு இல்லை, உங்களுக்கும் உதவியாய் இருக்கும்.
ஆபீஸ் செலவில் அச்செடுத்து, சாவகாசமாய் வீட்டில் அமர்ந்து விடையளிக்கும் வசதிக்கு இந்த இணைப்பு: (ஒரே தாளின் இரு புறங்களிலும் அச்செடுக்கும் நல்லோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்):
இனி..
இடமிருந்து வலம்:
1. தமிழ், संस्कृतं, తెలుగు, ಕನ್ನಡ எட்டிய தகுதி (4)
3. போதை மரம் (2)
4. தானே வரும் முன் அறிவிப்பு; சுய விளம்பரமன்று (3,4)
5. உச்சி வெயிலுக்கு உச்சியில் சோலை. குறிப்பு: ஆதியை நீட்டுக (6)
7. விகாரமில்லாத ஜென்மம் (2)
8. பாதுகாப்புக்கு உருவாக்கு (2)
10. ராமராஜன் கையில் இசைக்கும், விசைக்கும் (2)
11. நுனிப்புல் மேய்ச்சலால் நிறையவில்லை இந்தப் பாத்திரம் (5)
15. செடியில் வெடித்தது; அதில் பாதி முகத்தில் தெரியுது (2)
19. இனி இவர் ஸ்பெயினில் விளையாட மாட்டார் (3)
21. வசைப்பது தீனிப் பண்டாரம்! அசைப்பது? (6)
24. தகர வரிசையில் பணிப்பெண் (2)
மேலிருந்து கீழ்:
1. நீதிக் கம்பு; வளைந்தால் வம்பு (4)
2. சமையலில் ஒருவித மயக்கம் (3)
3. ஒரு கை சுழற்ற, ஒரு கால் சுழலும் (5)
4. புதியனவற்றில் வற்றாமல் (3)
6. முண்டாசுப் பாட்டு: கோதுமைக்கு இந்நதியில் இலை ஒன்றும் இல்லை (3,4)
12. தேர்வில் ஜெயம் எப்பொழுது? வள்ளுவ நெறியில் நிற்க. (3,2)
14. அரை நிர்வாணப் பக்கிரி "மாட்டேன்!" என்கிறார். (6)
15. அரிசில் என்னும் ஆறைக் கடந்தால் சேர்வோம் பழைய சோழர் தலைநகரம். (4)
18. அடிபட்டால் வலிக்கும், பூதங்களில் ஒன்றைப் போல (2)
20. பயணிக்கப் பயன்படும் (3)
21. திருவண்ணாமலை உள்ளே கிடைக்கும் நீர்த் துளி (3)
22. முக்கடவுள் கொள்கையில் முதல் கடவுள் (2)
வலமிருந்து இடம்:
9. கிலோ கிராம் வார இதழ், கண்டு கொள்ளாதீர்கள்! (2)
12. வரலாறு கூறும் அசைக்க முடியாத ஆதாரம்! (5)
13. ஏமாற்றுபவரே! ஏமாளியின் காதில் பெண்! (2)
14. பாட்டி முதல் பாக்யராஜ் வரை, கதையின் ஆரம்பம் (2)
16. நீதி நூல்கள் காட்டிய வழி (4)
17. கற்கால ஆடை, இலை! இக்கால ஆடை? (2)
23. பெரும்பாலான இஸ்லாமியக் கொடிகளில் காயும் (5)
25. அன்னக்கிளி கல்யாணத்தில் ஊருக்கே இந்த விருந்து (4,2)
கீழிருந்து மேல்:
7. மரத்தோடு ஒட்டிய உறவு (3)
13. உலகமயமாக்கலை முதல் அடியிலேயே சொன்ன சங்ககால ஜோசியர் மரியாதையின்றி (6)
17. நெல்லையப்பர் கோயில் அருகே, "விளக்கை அணை! கம்பெனி ரகசியம் தெரிஞ்சுரப் போகுது!" (5,2)
11 comments:
நண்பா, விடைகளை நேரிலேயே காண்பித்து விடுகிறேன்! சரியான அளவு எளிமை+இனிமை+புதுமை கலந்து படைத்துள்ளாய். புதிர்களை விடுவிப்பது மிகவும் உற்சாகமளித்தது. இந்தக் குறுக்கெழுத்து இவ்வலைப்பூவிற்கு variety சேர்க்கிறது.
ரசித்தவை:
இடம்-வலம் - 4, 7, 8, 10, 24
வலம்-இடம் - 17
கடிந்தவை:(the clue could have been better for such poetic words)
மேல்-கீழ் - 4,21
இடம்-வலம் - 15
மிகவும் யோசிக்க வைத்தவை:
மேல்-கீழ் - 14, 22
இடம்-வலம் - 19
Best - மேல்-கீழ் - 14
அருமை அருமை. :) இன்னும் குறிப்புகளைப் படிக்கவில்லை.. புதிருக்காகவே முதலில் ஒரு பூங்கொத்து. . விரைவில் விடைகளுடன் (கிடைத்தால்) சந்திக்கலாம். :P
@Bhupesh
நன்றி. பொங்கலுக்குள் ஆட்டத்தைத் துவக்கி வைப்பதே குறி. கடிந்தவை களைய அடுத்த முறை இன்னும் கொஞ்சம் யோசிக்க முயல்வேன்; உன்னை யோசிக்க வைத்தவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்...
@Bee
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா? ஈரோடு முடித்தாகிவிட்டது. பொன்னிரை முடிக்கும் தருவாயில். தூத்துக்குடி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தாலும் முடித்து விடும் என்று பச்சி சொல்லுகிறது. தஞ்சை ரொம்ப தாமதம் போங்க.
தம்பி சுரேஷ் பிரபு
ஏன் இப்படி? answer paper out பண்றீங்க?
சரி சரி நாங்களும் மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறோம். பாலாவின் விடைகளில் இருந்து சில வேறுபாடுகள் உண்டு. பிழை இருக்காது என நம்பிக்கை. இருந்தாலும் எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு மீதப் பரிசினை அளிக்குமாறு கண்டிப்போடு கேட்டுக் கொள்கிறேன்.
- அண்ணன் சேரலாதன்
தம்பி பூபேஷ்...
comment moderation - activate பண்ணுங்க please
Bee'morgan said...
முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. :P
ரொம்பவே ரசிச்சு விடுவிக்கும் படி இருந்தது. :)
innaiku 11 mani neram velai office la.. irunthalum asarama ukkanthu oru kai paththachu.. :) ஏதாவது தப்பு இருந்தா கண்டுக்காதீங்க.. நாளைக்கு காலையில ஒரு தடவை ரிவ்யு முடிச்சி final results அனுப்பறேன்..
@சேரல்,
உங்கள் விடைத்தாள் திருத்தப்பட்டு விட்டது. :) கீழுள்ள இரண்டு குறிப்புகளை மறு ஆய்வு செய்க:
கீழிருந்து மேல்:7
மேலிருந்து கீழ்:14
தங்கள் பங்கேற்புக்கே ஆயிரம் பொன் பரிசளிக்க வேண்டும். நிதி நிலைக் காரணங்களால் "ஹீரோ பென்" கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். மறுமுறை சந்திக்கும் பொழுது கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.
@சேரல்,
மன்னிக்கவும். இப்பொழுது, தணிக்கை நிலையை முடுக்கியிருக்கிறோம்.
பூபேஷு ரொம்ப ஸ்டிரிக்டு. வெட்டிபுடுவாரு வெட்டி. கவனமா பின்னூட்டம் கொடுங்க. :)
@Bee,
அடடே! அசதியோடு அசதியாக கட்டங்களை நிரப்பி இருக்கிறீர்கள். இன்னுமொரு கட்டத்தை இன்றே கட்டமளவுக்கு உங்கள் ஆர்வம் என்னைத் தூண்டுகிறது.
தங்கள் விடைகளில் மிகச்சிலவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும். உங்கள் இறுதியான, உறுதியான விடைகளை எதிர்நோக்கி..
-சுபி
பதில் சொல்லுங்க
சேகர்,
நினைவூட்டியதற்கு நன்றி. விடைகள் பதிவின் முடிவில்..
-சுபி
Post a Comment