Saturday, March 21, 2009

திரை கடலும் திரவியமும்




அலை நனைத்த பாதம்
கடல் நனைந்த பெளர்ணமி
ஒட்டி வந்த மணல்
கொட்டி வந்த கனம்
மடல் கடித்த ஈரம்
ஊர்ந்து சென்ற நேரம்
-
எல்லாம் விட சுகம் நம்மிடை நிரம்பிய மெளனம்!

நானும் இந்த தேசத்துக் கடலும் சுகம்;
நண்பனே...நலமறிய ஆவல்
-

3 comments:

Anonymous said...

Cute! :-)

Unknown said...

அல்லும் பொழுதும் உங்கள் அருகிலிருந்தும், கடற்கரையில் உங்களுடன் மௌனம் நிரப்பும் பொழுதுதானே கண்டுகொண்டீர்கள் நான் திரவியம் என்று! ;-)

நானும் நலமே!

பி.கு: நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் உங்களது ஆக்கங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கின்றன. தொடரட்டும் உங்களது ரசனை.

- சுபி :)

bhupesh said...

:) மெளனம் நிரப்பிய இடைவெளி விடவும் இப்போது திரை கடலும் திரவியமும் ஏற்படுத்தியுள்ள இடைவெளி பெரிது!

உன் 'திரவிய' பயன்பாடு எனக்கு விளங்கவில்லை - சிறு குறிப்பு வரைக. (1 X 2 = 2)