அலுவலகப் பேருந்தில், வைரமுத்து பற்றி ஒருவர் சிலாகித்துக் கொண்டிருக்க, முன் தினம் நண்பனின் தொலை பேசி அழைப்பு நினைவுக்கு வந்தது - "என்னடா இன்னும் கவிதை எல்லாம் எழுதுறியா?". கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதலாவது வேணும் என்று நினைத்துக் கொண்டேன். சரி சும்மா முயற்சி செய்யலாம் என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சுமாரான பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஒரு மெல்லிய காற்று வீச, கலைந்த கூந்தலைச் சரி செய்து கொண்டாள்.
"கலைந்த சிகையின்
அழகுக்குக் காரணம் -
காற்றா காதலா?"
என்று விறு விறுவென நண்பனுக்கு SMS அனுப்பினேன். "அட! இது work out ஆகும் போலிருக்கே!!" என்று உற்சாகம் அடைந்தேன்.
--
பேருந்தில் யார் யார் பயணிக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக, ஒரு ஏட்டில் அனைவரும் பெயர் எழுதி கையொப்பம் இடுவோம். அவள் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், மறு நாளும் அவள் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். கையொப்பம் இட்டுப் பின்னால் என் கையில் கொடுக்க, பெயரைப் பார்த்தேன் - "தென்றல்"!
"உன் பெயரை எழுதியதும்
பதிவேட்டின் பக்கங்கள்
படபடத்தன"
--
இப்படியாக ஒரு வாரம் SMS-ல் கவிதைகள் பறந்து கொண்டிருக்க, அன்று project lead எல்லோரையும் ஒரு அறைக்கு அழைத்தார். நம்ம teamல புதுசா கொஞ்சம் பேர் சேரப்போறாங்க. அவங்கள அறிமுகம் செய்யத்தான் இந்த meeting என்றார். எங்களைக் காக்கச் சொல்லிவிட்டு, வெளியே சென்று மூவரை அழைத்து வந்தார்; எனக்கு இரத்தம் தலைக்கேறுவது தெரிந்தது..மூவரில் ஒருவர் - தென்றல். "What are the chances!!" என்று ஆச்சிரியம் அடைந்தேன். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ள, என்னைப்பார்த்து ஒரு மில்லி மீட்டர் அதிகம் சிரித்தாள். இருக்கைக்குச் சென்றதும், விசைப்பலகையில் என் படபடப்பை டைப்படித்தேன்.
--
ஓரிரு நாட்களில் பணி நிமித்தமாக பேசிக்கொண்டோம் - அவள் அதிகமாகவும், நான் சிக்கனமாகவும். "நீங்க ரொம்ப 'reserved'-ஆ இருக்கீங்க" என்றாள். நான் சிரித்தேன் - மீண்டும் சிக்கனமாக.
"இதயத்தை முன்பதிவு செய்தவள் கூறினாள் -
' நீங்க ரொம்ப reserved'"
--
ஒரு நாள் காலை அவளிடமிருந்து அழைப்பு வந்தது.
"அவள் அழைக்கும் போது செல்கின்றன
vibration modeக்கு
என் செல்கள் அனைத்தும்"
' நான் வர ஒரு 5 மினிட்ஸ் ஆகும், டிரைவர கொஞ்சம் வெய்ட் பண்ணச் சொல்றீங்களா?' ' நிறையவே வெய்ட் பண்ணச் சொல்றேங்க' என்று வழிந்தேன். பேருந்து வரும் முன்னரே வந்து சேர்ந்தாள்.
"உங்க caller tone நல்லாருக்கு - என்ன படம்?" என்றாள்.
"Michael Learns to Rock ஆல்பத்துல ஒரு பாட்டு".
"ஓ! ஆங்கிலப் பாடல்கள் தான் கேப்பீங்களோ".
"இல்லைங்க, நீங்க தமிழ் பேசினாலும் கேப்பேன்".
"அட! உங்கள reservedனு தப்பா எடை போட்டுட்டேன்", என்று சிரித்தாள்.
--
ஒரு நாள் team-ல் அனைவரும் இரவு உணவிற்கு வெளியே சென்றோம். வெகு நேரம் ஆகியும் அவளைக்காணோம்.
"சைக்கிளுக்கு எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் காதலுக்கும் -
காத்திருப்பு"
என்று நண்பனுக்கு SMS அனுப்பினேன்.
கொஞ்சம் தாமதமாய் வந்தவள் என்னருகில் அமர்ந்திருந்த அரவிந்தை அடுத்த இருக்கைக்கு மாறச்சொல்லிவிட்டு என்னருகில் அமர்ந்து கொண்டாள். எல்லோரும் என்னை அர்த்தமாய்ப் பார்க்க, " நீங்க மட்டும் தான் நம்ம teamல veg..birds of same feather flock together" என்று சிரித்தாள். "அவங்க plateல இருக்கறது கூட birds of same feather தான்" என்று சமாளித்தாலும் எனக்கு உணவு இறங்கவில்லை. அன்றிரவு உறங்கவில்லை.
--
தேனீர் இடைவேளையில் ஒரு நாள், " நீங்க 'தண்ணீர் தேசம்' படிச்சிட்டிருந்தீங்களே,முடிச்சிட்டீங்களா? எனக்குத்தறீங்களா please?" என்றாள். அவளுக்கு வைரமுத்து பிடிக்கும் என்றும், புத்தகங்கள் படிப்பாள் என்றும் அன்று தெரிந்து கொண்டேன்.
--
ஒரு வேளை எல்லாம் காரணமாகத்தான் நடக்கிறதா? இவள் தான் என்னவளா? இவளுக்கு நான் ஏற்ற துணையா? என் குடும்பத்தில் இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா? திருமணம் பற்றி முடிவு செய்யும் நிலையில் நான் இருக்கிறேனா?" என்றெல்லாம் ஒரு மாதத்திற்கு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். கவிதைக்காய்க் காதலிக்கப் போய் இப்படி மூளையைப் பிராண்ட வேண்டியிருக்கிறதே என்று நொந்து போனேன். முடிவெடுக்கும் தைரியம் இல்லாமல், அவளிடமிருந்து விலக ஆரம்பித்தேன்.
"அறுத்து விட்டதும்
அதிகம் துடித்தது - காதல் -
பல்லியின் வால் போல"
என்று சென்றது நண்பனுக்கு SMS.
--
climax 2(for international audience):
சென்ற வாரம் அவளிடமிருந்து email வந்திருந்தது - அவள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் இருப்பதாகவும், தான் விரும்பியது போலிருப்பதாகவும். அதோடு, என்னுடனான நட்பு வினோதமானது என்றும் - நாங்கள் தொடர்பற்று போனதில் வறுத்தம் அடைவதாகவும்.
பல்லியின் வால் கடைசியாய் ஒரு முறை துடித்தது.
--
climax 1(for bollywood audience):
பின்னர் கதையில் சில twistகள் வந்து, தென்றலே என் வாழ்க்கைத் துணையானாள். நேற்று திடீரென கேட்டாள் "ஏன் நீ இப்போலாம் கவிதை எழுதுறதில்ல"; "கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதல் தோல்வியாவது வேணும்"; " நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே காதல் தோல்விதானே" என்று சிரித்தாள் - என் மனைவியாகிய தேவதை.
--
(Attempted a fiction, per request from Arvindh. Because of Delhi-6 effect added two climax)
8 years ago
13 comments:
Ultimate HM! Situation and names fiction aah irukalaam! But eppovo aditha thendralukku aadi kondirukirathu ungal ithaya naanaL :-) engala aematha mudiyathu HM!
thenrale thenrale - mella nee pesu
"Bhu" pesh udan mella nee pesu... :)
good one HM!!! iruttu room la fan potta maari.. unga idhayathula thenral ah vandhutu poitaala :)
Srikk, Seshu & Subi: உங்களுக்காகவே real fiction(oxymoron!!) ஆக்க இன்னொரு climax எழுதிட்டேன் :)
Nice googly from you...
climax #3 (for kollywood audiances) : thenral has a younger sister "ilanthenrdal" whos is madly in luv with bhupesh... and one day thendral suddenly comes to bhupesh anna and introduces her lover "mohan" who happens to be bhupesh's room mate and best friend.. one day when bhupesh comes home from office he sees mohan's & thenral's letter and knows that they have eloped together with mohan singing ("thenral vandhu ennai thodum satham indri mutham tharum")... and on thier way to thiruthani they meet with accident and mohan dies on spot thendral is taken to hospital.. bhupesh happens to be there (some how) at the time of accident and admits her in hospital.. unfortunately thendral dies and her last wish which she tells bhupesh amidst very slow breathing and ecg graph running near flat... "please marry ilan thenral and live happily.. this is my last wish. can u do this for me?" ..which bhupesh does at last.. (i know there is no logic in this climax.. but i said kollywood audience right ;)
climax 2 - இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.. :)
//பல்லியின் வால் கடைசியாய் ஒரு முறை துடித்தது. - தொட்டுடீங்க பாஸ்!!!
ஆனா கதை ரொம்ப ரொம்ப குறுங்கதை. சீக்கிரமா முடிஞ்சிடுச்சு...
ஹ்ம்ம்ம்....என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது.... :)
சில இடங்களில் புன்னகைத்தேன் பூபி......
//கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதலாவது வேணும்//
//"இதயத்தை முன்பதிவு செய்தவள் கூறினாள் -
' நீங்க ரொம்ப reserved'"//
//"சைக்கிளுக்கு எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் காதலுக்கும் -
காத்திருப்பு" // * பூபியின் சுய ரூபம்.... :) தாங்கல சாமீ....... *
நீ இன்னும் நிறைய தமிழிலும் எழுதலாமே :)
-ப்ரியமுடன்
சேரல்
Hi nice post. Reading your Tamil after a long while. i liked all the kutti kutti stanzas. Bhu's touch in many places. liked them. Climax 2 is better:)and Srikk climax 3 is too much. mudiyala. Waiting to see ur 'thendral'
kavithai ezhutha mattumilla enna comment ezhutha veikavum kaadhal pathina post thevai paduthu:-)) Keep them coming Bhupesh..I always have fun reading your post!
கதைக்கு இடையே கவிதையா ?!
கவிதைக்கு இடையே கதையா ?!
தெரியவில்லை ....!!
இரண்டும் மிக அருமை !!!
romba supernga
how can i follow ur blog. followers tab is not there?
//ஓ! ஆங்கிலப் பாடல்கள் தான் கேப்பீங்களோ".
"இல்லைங்க, நீங்க தமிழ் பேசினாலும் கேப்பேன்"//
சூப்பர்...
Post a Comment