Sunday, April 11, 2010

சென்னை நேசனின் கோவை வாசம் - I




எட்டடி சாலையில் எண்ணற்ற சக்கரங்கள்,
முன் செல்லும் வாகனத்தை
முந்திச் செல்ல எத்தனிக்கும்;
எதிர் படும் வாகனத்தால்
பிள்ளயைப் போல்
பின் பதுங்கும்
--
சாலை நெரிசலில்
மெல்ல நகர்கின்றன வாகனங்கள் -
கோவையும் மா'நகர்'
--
குறளினும் குறுகிய சாலைகள்
உலகத்தமிழ் மாநாடு தயவில்
அதிகாரம் பெறுகின்றன;
வழிந்தோடும் பொருட்பால்
--
cross cut-ல் ஆரம்பித்து
சத்தி road வழி சென்று
100 feet வழி மீண்டும் cross cut-ல் முடிகிறது
என் பித்தகாரஸ் தியரம்
--
பொள்ளாச்சி- வால் பாறை- டாப் ஸ்லிப்- ஊட்டி
தருகின்றன
வெளியிலிருந்து ஆதரவு
--
சுவையூற்றாம், கற்கண்டாம்
இச்சிறு நாவில் இன்னும் படவில்லை
சிறுவானி
--
பெயரிலிருந்தாலும்
கோவைத்தமிழ் பேச்சிலில்லை
'வை'தல்
--
கோட்டம் இல்லை spencer இல்லை பீச் இல்லை
எங்கு சந்திப்பர் காதலர்கள்?
--
திங்கள் தெரியும் செவ்வாய் ஒளியும்
தூரத்து காட்சி மயக்கம்
பெயர் தெரியா மலைத்தொடர்
--
அண்ணன், அக்கா, தம்பி,
சித்தப்பா, பெரியம்மா
கோவை நகர் நடத்துனர்க்கு
எல்லோருமே உறவு

8 comments:

Ramprabu said...

திருத்தம்... உலக 'செந்தமிழ்' மாநாடு.

srikk said...

good one Bhups!.... en "piththa cross" theorem nu sollirkalaam :)

Krithika said...

Nice one HM... reminded me of my good old CBE days.. :)

Seshadri T A said...

superu :-) HM ... aana thendral pathi ethume solaliye..

Siva said...

"வழிந்தோடும் பொருட்பால்" - I liked it .. typical bhupi style...

Anonymous said...

//பொள்ளாச்சி- வால் பாறை- டாப் ஸ்லிப்- ஊட்டி
தருகின்றன
வெளியிலிருந்து ஆதரவு

வெயிலில் இருந்தும் ஆதரவு :)

அருமையான பதிவு.. ரசித்தேன்

bhupesh said...

Srikk and Sambu, thank you!

Lingams....dude, never thought you were following my blog! thank you!

Prem..good one!

bhupesh said...

Krithi...CBE good old thaan. new CBE is not that good!