1.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
பொருளிலாச் சொற்றொடரென்ப
இம்மூன்றும் கடவுச்சொல் விதி
--
2.
மறக்காதே
எவர்க்கும் கொடுக்காதே
எங்கேனும் குறிக்காதே
குறித்தாலும் தொலைக்காதே;
ஒருவரின் ரகசியம்
கடவுச் சொல்
வேறெவரும் அறிவது
நன்மை இல்
--
3.
தன்மொழியோ
பொன்மொழியோ
அனைத்துக்கும் முன்மொழியோ
மிக விரும்பும் செம்மொழியோ -
எத்தகு அகராதியிலும் -
இதுவென்றும் அதுவென்றும்
எவர்க்கும் விளங்காச் சொல்
கடவுச் சொல்
--
4.
கவிதைக்கும் கனவுக்கும்
காதலிக்கும் கடவுளுக்கும்
நாய்க்கும் நட்புக்கும்
அறிவுக்கும் அண்மைக்கும்
சோகத்துக்கும் சோம்பலுக்கும்
உரித்தாகும் கடவுச் சொல்
உருவாகும் நிமிடத்தில்
--
5.
சிறிதென்று கொள்க
சில திங்களென்று கொள்க;
சினேகிதர்கள் ஊடல் போலும்
கடவுச்சொல் வாழ்நாள்
--
6.
கணினிக்கோ
பிற கருவிக்கோ
சேமிப்புத் தொகைக்கோ
பிற சேவைக்கணக்குக்கோ
எவற்றின் கடவுச்சொல் மீதும்
காமுறுவர் கயவர்
--
7.
சிதம்பர ரகசியமே
சிற்றம்பலம்
பேணாக் கடவுச்சொல்லோ
பேரம்பலம்
13 years ago
6 comments:
HM Rocks! brilliant.... :-)
சிறிதென்று கொள்க
சில திங்களென்று கொள்க;
சினேகிதர்கள் ஊடல் போலும்
கடவுச்சொல் வாழ்நாள்
loved these...u @ ur best...
சிதம்பர ரகசியமே
சிற்றம்பலம்
பேணாக் கடவுச்சொல்லோ
பேரம்பலம்
excellent punch... :-)
one more frm my end...
kaathal sol... kavithai sol..
aayin.. kadavulukkum sollathe...
un kadavu sol :-)
Superb Bhups
good thought.. :)
Nice ones Bhupi :)
அருமை நண்பா. இரு கேள்விகள்:
1. சமீப அனுபவம்?
2. இந்தக் கருவுக்கும் உடம்பு சரி இல்லாமல் போனதற்கும் சம்மந்தம்?
நன்றி நண்பர்களே! சாம்பு -அருமை!
சுபி - வெகு நாளைய அனுபவம்!
Post a Comment