Saturday, December 24, 2011

சிலை வழி மேவும் உளி ஒலி தேடி - II


நவம்பர் 2011ல் நாங்கள் சென்றிருந்த சோழர்களின் கோயில்களைப்பற்றிய பயணத்தொடரின் இரண்டாம் பாகம் இது. (முதல் பாகம் இங்கே). நண்பன் வீரபாகுவின் யோசனைப்படி வரலாற்றுடன் கற்பனையைப் புனைந்து இப்பகுதியை எழுதியுள்ளேன். அதிக நேரம் செலவிட முடியாததால் குறைந்த அளவே ஆரய்ச்சி செய்ய முடிந்தது.எனவே தரம் எதிர்பார்க்க வேண்டாம். இந்தக் கதை பெரும்பாலும் கற்பனையே. விக்கிப்பீடியா மூலம் சேகரித்த செய்திகளை BOLD செய்துள்ளேன். (Click on the images to see a larger picture).

---------------------------------------------------------------------------------
அத்தியாயம் - 1

"ராஜ ராஜனே! இலங்கைப் பயணம் நல்ல படியாக முடிந்ததென்று கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்ச்சி".

"ஆம் மாமா. அங்கே நடந்த ஒரு சம்பவம் பற்றி, பிரதான அமைச்சர் என்ற முறையில் நான் உங்களிடம் ஆலோசனை செய்ய விரும்புகிறேன்".

"நல்லது"

"பயணத்தில் ஒரு இரவு புத்த மடம் ஒன்றில் தங்க நேர்ந்தது. அன்று நான் கண்ட கனவு என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது"

"என்ன கனவோ?"

"இப்போது சிறு சிறு காட்சிகள் மட்டுமே நினைவில் உள்ளன....நம் தலை நகருக்குள் யானைகள் நிறைய நுழைகின்றன. அதில் ஒரு யானை இந்திரனின் ஐராவதம் போல் வெண்மையாய் இருக்கிறது. மதம் கொண்டது போல் தெரிகிறது. மக்கள் என்னைத் தேடுகின்றனர். என்னைப் போன்ற ஒருவன் - அது நிச்சயம் நானில்லை - ஒரு சிங்கத்தில் ஏறி வருகின்றான். அவன் பின்னே பல சிங்கங்கள் பாய்ந்து வருகின்றன. ஒரு சிங்கம் ஒரு யானையைத் தாக்குகின்றது. சுற்றிலும் போர் காட்சிகள் போல் தோன்றுகின்றது. ஆனால் போர்க்களத்தில் இல்லாமல் நாட்டிற்குள் அப்பாவி மக்களைத்தாக்கும் விதத்தில் நடக்கிறது. மீன் கொடியைப் பார்த்ததாகவும் ஞாபகம். ஆனால் நிச்சயமாகக் கூற முடியவில்லை".

"களைப்பின் காரணமாக ஏற்பட்ட அர்த்தமற்ற கனவாக இருக்க வேண்டும். இது பற்றி கவலை கொள்ள வேண்டாம்".

"எதற்கும் கணியனாரிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என எண்ணினேன்"

"மன்னர் என்னை மன்னிக்க வேண்டும்! உங்கள் நம்பிக்கை, படை பலத்தைக் காட்டிலும் வான சாஸ்திரத்தில் நாளுக்கு நாள் வலுக்கிறது. பிரதான அமைச்சர் என்ற முறையில் எனக்கு இதில் ஒப்புதல் இல்லை. அதற்கு மேல் உங்கள் விருப்பம்".

"......................."

"புறப்படும் முன், ராஜாதி ராஜன் பற்றி, அறிந்து கொள்ள விரும்புகிறேன்".

"நிச்சயம்...இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கை தேவை. மற்ற விசயங்களை விரைவில் கற்றுக் கொள்வான் என்று நம்புகிறேன். இளவரசர் குலோத்துங்கனுக்குத் தங்கள் குமாரனின் துணை மிகவும் அவசியம். ராஜாதி ராஜனிடம் தஞ்சைப் பகுதியை ஒப்படைக்கலாம் என இருக்கிறேன்".

"நல்லது, நான் வருகிறேன்".
---------------------------------------------------------------------------------

அத்தியாயம் - 2

Ram was in deep thoughts after the phone call.

"Qui est-ce Ram?"

"Chidhambaram uncle"

"It was a long call. quelque chose de sérieux?"

"No..not serious. Actually, I am not sure. He didn't say so.."

"But you seem worried"

"Not worried...he is asking me if we could come to India"

"When?"

"As soon as possible. He is worried about dad. Things are getting worse in Lanka"

"Any new developments?"

"..the rebel groups are getting stronger..but seems the violence has increased. Lots of Tamils are fleeing to Tamil Nadu"

"I see.."

"Will you be able to take leave for about 2 weeks? Anyways, we have been planning a trip for about a year now".

"Let me check. What about you?"

"I have to go anyway - even if it means going on unpaid leave. The plan is that uncle will talk to the people in Mattakalappu to bring dad with them. The idea is, dad will somehow be brought to Tanjore by the time we reach there."

"ok..are you planning to bring him here?"

"It will be difficult to arrange for Visa that quick. It will be even more difficult to convince dad."

"Of course! He wants to be with your people"

"Yes..! God, I don't know if we really have our people there. Let us worry about bringing him later."

Senta held his hands as if to say 'things will be fine'.

"and...Senta, since Manga is here in Paris, I thought of taking him along with us. He wanted to see the temples."

"bien.."

"good...and Senta, I think I better tell you something that I haven't told you before"

"What? Don't tell me you have a lady love there!"

He smiled and continued.."The main reason why uncle is asking me to come there is to sort out a land problem...the land is in my name"

"I see!!"

"Yeah...it is a small piece of land in a place called Thaaraasuram - a small town. It is next to a temple - built by the Cholas."

"So, your supposedly forefathers did leave you something!"

"Senta..please! I have told you that I don't believe my dad's stories. The society has branched out so much and I have only a small piece of land there. I do not know if dad inherited it as a Chola descendant or through some corrupt moneylender".

"Hey..I was just kidding! You should develop a sens de l'humour".

"Seems the government is trying to buy up the land for some road construction. Uncle thinks I can use some influence and stop it".

"Why would you stop a road construction?"

"To preserve the temple - my dad and the family is so attached to the temple even though some of them do not believe in the Chola lineage story".

"What do you think?"

"I don't know. I do not want to disappoint dad. The land is in my name because he somehow believes that I will preserve it"

"All of it sounds too dramatic to me. Anyways, what influence do you have in India? As such you are a no body in Paris!"

"Right. But Manga could probably do something."

"Ram..what can a Filipino do in India?"

"A Filipino in the World Heritage Committee of UNESCO could do something. And I believe, the temple does deserve Manga's attention"

"Wow! If I am thinking what you are thinking...then Mr.Ram does have a plan. intelligentes!"

"Merci.."

---------------------------------------------------------------------------------
அத்தியாயம் - 3

"கணியனாரே, உங்களுக்குக்காகத் தான் காத்திருக்கிறேன். அமருங்கள்."

"மன்னா! நீங்கள் கூறிய கனவுகள் பற்றி கனவு சாஸ்திர நூல்களில் ஆராய்ந்தேன். நாட்டிற்குத் தீமை விளைய இருக்கிறது என்பதைக் கணிக்க முடிகிறது. அது போராகவும் இருக்கலாம். அல்லது பஞ்சமாகவும் இருக்கலாம்."

"அந்த அளவிற்கு என்னாலும் கணிக்க முடிந்தது. யானைகளுக்கும் சிங்கங்களுக்கும்...என்ன அர்த்தம்?"

"இலங்கையில் இருக்கும் கரையர் சமூகத்தின் சின்னம் யானை என்பதும், அவர்கள் தற்போது நம்முடன் நட்புறவோடு இல்லை என்பதும் உங்கள் மூலம் நான் அறிந்தது. இலங்கையில் நமக்கு ஆதரவாக இருக்கும் மன்னர்கள் சிங்கத்தைச் சின்னமாகக் கொண்டவர்கள் என்பதும் நாம் அறிந்ததே. ஒரு வேளை கரையர்கள் பாண்டியர்களுடன் சேர்ந்து நம்மைத் தாக்க வருவதற்கான் அறிகுறியாக இருக்கலாம் இக்கனவு."

"அப்படியா!..ம்ம்..சரி..குலோத்துங்கன் பற்றியும் ராஜாதி ராஜன் பற்றியும் கேட்டிருந்தேனே."

"ஆம் மன்னா! இளவரசரின் பிறப்பு நேரப்படி, அவர் சோழப்பேரரசை ஆள்வதில் தடை ஒன்றும் இல்லை, ஆனால் சமீபத்தில் நடக்கவிருக்கும் தீமை ஒன்றில் இருந்து அவரைக் காக்க வேண்டும். பிரதான அமைச்சரின் குமாரனின் பிறப்பு நேரப்படி,அவருக்கும் நாட்டை ஆளும் அம்சம் இருக்கிறது."

"இளையவன் பற்றியும் உங்களிடம் கேட்க வேண்டும். அவசரம் இல்லை. இப்போது போய் வாருங்கள்."

--------

"மன்னருக்கு வணக்கம்!"

"வணக்கம் ஸ்தபதியாரே..."

"நற்செய்தியோடு வந்திருக்கிறேன் மன்னா!"

"தாராசுரம் சென்று வந்தீரா?"

"ஆம் மன்னா! ஐராவதம் சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படும் குளத்தையும் அருகில் வீற்றிருக்கும் ஐராவதேசுவரர் ஆலயத்தையும் கண்டோம்."

"அங்கு நான் குறிப்பிட்டிருந்தபடி பெரிய ஆலயம் கட்டுவதற்கான அமைப்பு உள்ளதா?"

"இருக்கிறது மன்னா! ஆனால், தஞ்சை பெரிய கோயில் உயரத்திற்கு அங்கு கட்டுவது சாத்தியமல்ல."

"அது நம் எண்ணமும் அல்ல! இரண்டாம் ராஜ ராஜ சோழன் இருக்கலாம் ஆனால் பெரிய கோவில் ஒன்று தான் இருக்க முடியும். வேறு வகையில் நாம் ஏதாவது புதுமை செய்ய வேண்டும்."

"நல்லது மன்னா! தஞ்சை கோயிலின் பிரம்மாண்டம் அதன் சிற்ப வேலைகளை மறைத்து விட்டது. சோழர் குடியின் சிற்பக் கலை வெளிப்படும் வகையில் நாம் இக்கோயிலைக் கட்டுவோம்."

"நல்ல யோசனை. மேலே கூறுங்கள்!"

"நிறைய தூண்கள் வைத்துக் கட்டினால் அவற்றில் இதிகாச காட்சிகளைச் சிற்பங்களாக உருவாக்கலாம். ஆலயத்தின் மண்டபத்தை மேலகடம்பூரில் உள்ளது போல் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்லும் ரதம் போல் வடிவமைக்கலாம்."

"ஒன்று செய்யுங்கள், உங்கள் கற்பனையை ஒரு சித்திரமாக எழுதி வாருங்கள். என் மனதிலும் புதிர் போல் சில காட்சிகள் உள்ளன. அவற்றையும் சிற்பங்களாக வடிவமைக்க முடியுமா என பார்க்கலாம்."

"ஆகட்டும் மன்னா!எனக்கு விடை கொடுங்கள்!"

---------------------------------------------------------------------------------

அத்தியாயம் - 4

"வாங்க வாங்க! மாப்ள, சவுக்கியமா இருக்கியா?" - வரவேற்றார் சிதம்பரம்.

"இருக்கேன் மாமா. நீங்க நல்லா இருக்கீங்களா?" - அவரைத்தழுவிக்கொண்டான் ராம்.

"வணக்கம் மாமா! சவுக்கியமா?" - என்று சுமாரான தமிழில் வினவினாள் சென்தா.

"பேஷ்! நல்லா தமிழ் பேசறியேமா...வெரி குட்."

"மாமா, இது என்னோட Friend மங்கவர்ணன். From Philippines." - மங்கவர்ணனை அறிமுகப்படுத்தினான்.

"Hallo Sir!"

"Pleased to meet you! Do you speak Tamil?"

"No sir, I wouldn't claim so", என்று கூறிவிட்டுச் சிரித்தான் மங்கவர்ணன்.

"அவன் பேசினா புரிஞ்சிப்பான். பேசத் தெரியாது. அவங்க வீட்ல எல்லாரும் நல்லா தமிழ் பேசுவாங்க."

"நல்லது. நான் English பேசிக் கஷ்டப்படத் தேவை இல்லை பாரு!வாங்க கார்ல போயிட்டே பேசலாம்" , என்று காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார் சிதம்பரம். மூவரும் அவரைத் தொடர்ந்தனர்.

"மாமா! Peugeot arrange பண்ணிட்டீங்களா! Super!" - பூரிப்போடு ராம் கேட்டான்.

"நான் பண்ணலப்பா. இந்தியால Peugeot வர்றதில்ல. நீ Peugeot கிடைக்குமான்னு கேட்டன்னு உங்க அப்பாக்கிட்ட சொன்னேன். அதுல சிங்க உருவம் பொறிச்சிருக்கும்னு சொல்லி, "நான் நெனச்சபடியே நடக்குது"ன்னான். யாரோ ஒரு சிலோன்காரர புடிச்சி வாங்கிட்டு வந்திட்டான். உனக்கு ஏதாவது புரியுதா?"

"இல்ல மாமா. எனக்கு Parisல Peugeot ஓட்டிப் பழக்கம் ஆயிட்டதால கெடச்சா பரவால்லனுதான் கேட்டேன். அப்பா இன்னும் அப்படியேதான் இருக்கார் போல."

"ஆமாம்பா. இப்போலாம் அதிகமா பேசறது இல்ல. இன்னைக்கு மருமக வரால்ல, பேசறானான்னு பாப்போம்."

சிதம்பரமும் சென்தாவும் முன்னிருக்கையில் அமர, ராம் மற்றும் மங்கவர்ணன் பின்னிருக்கையில் அமர்ந்தனர். சென்தா கையில் ஒரு தமிழ் புத்தகம் வைத்திருப்பதைக் கண்டார் சிதம்பரம்.

"என்னம்மா புத்தகம் அது?" என்றார் சென்தாவைப்பார்த்து.

"இது மாமாவுக்காக எடுத்துட்டு வந்தேன் மாமா. "இந்தோனேசியாவில் தமிழர்கள்" அப்படின்னு எங்க பெரியப்பா எழுதின புத்தகம்."

"மாமனாரை ice புடிச்சுருவ போலிருக்கே. அந்த அட்டைப்படத்த எங்கையோ பாத்த மாதிரி இருக்கு" என்றவாரு காரைச் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த அட்டைப்படத்தை அவள் ஒரு முறை பார்த்துக்கொண்டாள்."இதுவும் பெரியப்பா போட்டதுதான். அவர்கிட்ட இருந்த பழைய painting பாத்து போட்டது."

"நான் எதிர்பார்த்தத விட நல்லா தமிழ் பேசறியேமா!"

"இந்தோனெசியால எங்க தாத்தா பாட்டி எல்லாம் நல்லாவே தமிழ் பேசுவாங்க மாமா."

"பேஷ்! கல்யாணத்துக்குத்தான் என்னால வர முடியல! எனக்கும் உன்ன மாதிரியே ஒரு மக இருந்தா. சீதான்னு பேரு. அவ இருந்திருந்தா ராமுக்கு அவளத்தான் கட்டி வச்சிருப்போம். நாங்க எப்பயுமே குடும்பத்துக்குள்ளயே கல்யாணம் கட்டிக்கிறதுதான் வழக்கம்."

"'Senta'ன்ற பேருக்குக் கூட 'சீதா'ன்னு தான் மாமா அர்த்தம் - Javaneseல."

"அப்படியா! என்னோட மகளே வந்தாப்லதான்னு சொல்லு."

"ஆமா மாமா!" என்று சிரித்தாள்.

"நான் அவனுக்குத்தாம்மா மாமா. நீ என்னை அப்பான்னே கூப்பிடு."

"சரிப்பா."

வழியில் கடந்த கோயில்களைப் பற்றியும், கட்டிடங்கள் தெருக்கள் பற்றியும் ராம் மங்கவர்ணனுக்கு விளக்கிகொண்டு வந்தான்.

"எங்கள பத்தியெல்லாம் சொல்லிருக்கானா இவன்?" என்று சிதம்பரம் தொடர்ந்தார்.

"சொல்லிருக்காருப்பா. நீங்க சோழர்கள் வம்சம் அப்படின்றது பத்தி நிறைய சொல்லிருக்காரு.உண்மையாப்பா?"

"எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லமா. ராமுக்கும் கூட இல்ல. இங்க இருந்தா மார்க்கண்டேயனோட சேந்து இவனும் அப்படியே ஆயிடுவான்னுட்டுதான் எங்க அண்ணன் இவன France கூட்டிட்டுப் போயிட்டாரு. மார்க்கண்டேயன்றது அவனோட உண்மையான பேர் கூட இல்ல தெரியுமோ! பழைய ஓலைச் சுவடியெல்லாம் படிச்சிட்டு பேர மாத்திக்கிட்டான். நாங்க எப்பவுமே பசங்களுக்குச் சிவபெருமான் பேரு வக்கிறதுதான் வழக்கம். இவனுக்குத்தான் முதல்ல ராம்னு பேர் வச்சான். எங்க Generationல இப்படி நடக்கும்னு ஓலைச்சுவடில போட்டிருக்காம். தாராசுரம் கோயில்ல கூட இதுக்குக் குறிப்பு இருக்குன்னுல்லாம் சொல்லி எதாவது உளறிகிட்டே இருப்பான். என் தங்கச்சி, அதான், உன்னோட மாமியார், ரொம்ப அவதிப்பட்டா அவன வச்சுகிட்டு. அவ அழாத நாள் இல்ல. எப்படியோ ராம்-அ France அனுப்பி வச்சோமே!"

பேச்சின் போக்கை மாற்ற நினைத்த ராம், பின்னாலிருந்து..."சிலோன் பிரச்சன இப்போ எப்படி மாமா இருக்கு?"..என்றான்.

"அதை ஏம்பா கேக்கற? ரொம்ப அராஜகம் பண்றானுங்க. அகதிங்க சாரை சாரையா வந்துகிட்டு இருக்காங்க பாவம்! MGR அவரால முடிஞ்சத செய்யறாரு. போன மாசம் கூட அனுராதபுரத்துல நிறைய பேர கொன்னுட்டாங்க. இப்போதான் Rajiv Gandhi பேச்சு வார்த்தைக்குக் கூப்டிறுக்காறு. பூடான்ல பேசப்போறாங்க. நல்ல விதமா முடிஞ்சா பரவால்ல" என்றவர், தனக்குத்தானே, "ஈஸ்வரா மனுஷனுக்கு நல்ல புத்திய குடுப்பா!", என்றார்.

---------------------------------------------------------------------------------

அத்தியாயம் - 5

"மன்னா! வறட்சிப்பகுதிகளுக்குத் தேவையான தானியங்களை அனுப்பி வைத்துவிட்டோம்."

"நன்று! மேலும் பல பகுதிகளில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் அமைச்சரைச் சந்தித்து வறட்சி நிலை வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறிச் சென்றுள்ளனர். நாம் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆக வேண்டியதைப் பாருங்கள். போய் வாருங்கள்!"

"வாருங்கள் மாமா!"

"ராஜ ராஜனே, வறட்சியைச் சாதகமாகக் கொண்டு பாண்டியர்கள் மக்களைப் புரட்சியில் ஈடுபடுத்த முயல்வதாக ஒற்றர்களிடம் இருந்து செய்தி வந்துள்ளது."

"அப்படியா!"

"இனி நாம் தாமதம் செய்வது நல்லதல்ல. குலோத்துங்கனையும் இளையவனையும் பல்லவராயருடன் விரைவில் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். சில நாட்கள் அவர்கள் கடல் தாண்டி வசிப்பதுதான் நல்லது. முன்பே ஆலோசித்தது போல் குலோத்துங்கன் போர் பயிற்சிகள் முடித்துத் திரும்பும் வரை ராஜாதி ராஜனை பட்டத்து இளவரசனாக அறிவித்தல் நன்று."

"ஆகட்டும் மாமா. தேவையான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்."

---------------------------------------------------------------------------------

அத்தியாயம் - 6ராம், சென்தா, மங்கா, மார்க்கண்டேயன் நால்வரும், தாராசுரம் கோயிலில் இருந்தனர். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே சில குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தான் மங்கா. ராம் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான். அவர்களிடமிருந்து பத்து அடி தொலைவில் மார்க்கண்டேயன் தன் மருமகளுக்குச் சோழ வரலாற்றை விளக்கிக் கொண்டிருந்தார்.
"What animal is this?" என்று குறிப்பு எடுத்தவாறே கேட்டான் மங்கா.

"This is 'Yaali'. It is a mythological animal. It supposedly represents a lion. You will find them in almost all temples of Tamilnadu. Of course, this temple has a lot of them."

"Wow, these sculptures are wonderful", என்று கூறிய மங்கா, தன் புகைப்படக் கருவிக்குத் தீனி கொடுத்தான்."These sculptures show stories from Indian epics like Mahabharatha, Ramayana, Sivapuranam. Have you heard of them?"

"Yes, I have heard of Ramayana for sure. In fact Mangawarna is one of the main characters in Ramayana."

"Really? I never knew that man. What character?"

"He is the younger brother of Ram - in Filipino Ramayana. I think the popular name is Lakshmana."

"Amazing man. So, we are brothers..huh?"

"சென்தா, இங்க பாருமா, நீ எனக்குக் குடுத்த புத்தகத்துல இருந்த படம். பேய் ஓட்டுற மாதிரியான கற்பனை இது. இதுக்குப் பின்னால ஏதாவது கதை கூட இருக்கலாம். இந்த தாராசுரம் கோயிலே இரண்டாம் ராஜ ராஜ சோழன் கண்ட கனவுல வர காட்சிகள்னு ஓலைச் சுவடிகள்ள இருக்கு."
"I see. Raam, look at this. This resembles the painting in the front page of my uncle's book.""

"இந்தக் கோயில்ல ஏதோ குறிப்புகள் இருக்கறதா சிதம்பரம் மாமா சொன்னார்", என்று மார்க்கண்டேயனைப் பார்த்து கேட்டாள் சென்தா.

"ஆமா.." என்று அவளையும் ராமையும் மாறி மாறிப் பார்த்தார். விளக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் தயங்கினார்.

"எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்.. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்...உங்க இஷ்டம்", என்று அவர்களைப் பார்த்துக் கூறி விட்டு, மங்காவை நோக்கி, "ஏம்பா மங்கா, உனக்குத் தமிழ்ல சொன்னா விளங்கும்ல?", என்றார்.

"Yes uncle, go ahead."

"இரண்டாம் ராஜ ராஜ சோழன் ஒரு பேரழிவு நடக்கப் போறதா கனவு கண்டான். கனவு முழுக்க சிங்கங்கள். யானைகளுக்கும் சிங்கங்களுக்கும் பெரிய போராட்டம் நடக்குது", என்று ஒரு சிற்பத்தைக் காண்பித்தார்.


"சிங்கத்த வாகனமாக் கொண்ட வீரன் ஒருத்தன் வந்து சோழ நிலத்த காப்பாத்துவான்னு மன்னன் நம்பினான்", என்று ஒரு சிற்பத்தைக் காட்டிவிட்டு ராமைப் பார்த்தார்." இரண்டாம் ராஜ ராஜ சோழனுக்கு அப்புறம் ராஜாதி ராஜன்னு ஒரு மன்னன் ஆட்சிப் பொறுப்பு ஏத்துக்கிறான். அவந்தான் இந்தக் கோயில கட்டி முடிச்சது. ஆனா அவன் இரண்டாம் ராஜ ராஜ சோழனுடைய மகன் இல்ல. அவனுக்கப்புறம் குலோத்துங்க சோழன் அப்படின்ற மன்னன் - அதாவது Third Kulothunga Chozhan - ஆட்சிக்கு வந்தான். அவன் தான் இரண்டாம் ராஜ ராஜ சோழனோட மூத்த மகன் அப்படின்னு சில ஆரய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இன்னொரு மகன் இப்ப இருக்கிற இந்தோனேசியாலயோ இலங்கைலையோ வளந்ததா சொல்றாங்க. என்ன பேர்னு தெரியல. அவனுடைய வம்சத்துல வந்தவங்கதான் எங்க குடும்பம் அப்படின்றது என்னோட ஆய்வுல நான் யூகிக்கிறது", என்று ஒரு தூண் அருகில் வந்து நின்றார்.
"இந்தத் தூண்ல எட்டு பக்கங்கள் இருக்கு. தன்னுடைய இறப்புக்குப் பிறகு எட்டு வருஷம் கழிச்சுத் தன்னுடய மகன் ஆட்சிக்கு வருவான்னு ராஜ ராஜன் நம்பினான். நமக்குக் கிடைக்கிற கல்வெட்டுகள வச்சு பாக்கறப்ப அப்படித்தான் நடந்ததுன்னு தெரியுது."

"இந்தச் சக்கரத்தப் பாருங்க. என்ன ஒரு அருமையான சிற்ப வேலைப்பாடு. இதுல முப்பத்தி ரெண்டு spokes இருக்கு. என்னோட கணக்குப்படி, spoke ஒவ்வொன்னும் இருபத்தி அஞ்சு வருஷத்த குறிக்குது. ராஜ ராஜ சோழன் இறந்து 800 வருஷம் ஆச்சு. அவன் வம்சத்த சேந்த ஒருத்தன் இப்போ இந்த மண்ண காக்க வரணும்.""இப்போ ஒரு பேரழிவு வரப்போகுதுன்றீங்களா? என்னை யுகப்புருஷன்றீங்களா?", என்று கோபமாகக் கேட்டான் ராம்.

"அழிவு..சோழக்குடி மக்களுக்கு..சோழ நிலத்துக்கு. அது தாராசுர நிலமாவும் இருக்கலாம், இலங்கை நிலமாவும் இருக்கலாம். உன்னால ஏதாவது செய்ய முடியும்னு என்னால நம்பத்தான் முடியும். செய்யறது உன் கைலதான் இருக்கு. நீ யுகப்புருஷனா இல்லையான்னு தீர்மானிக்க வேண்டியது நீதான்."

"நீ ஒரு பத்திரிக்கைக்காரன். அதுவும் ஒரு மேல் நாட்டுப் பத்திரிக்கைல வேலை செய்யற. இலங்கைல பெட்ரோல் இல்ல. உங்க மேலை நாடுகளுக்கு இலங்கை ஒரு பொருட்டா இல்லாம போகலாம். ஆனா உங்க அப்பா இந்த மண்ல வளந்தவன். இவங்களுக்காக ஒரு சின்ன முயற்சியாவது செய்யற கடமை உனக்கு இருக்குன்னு தோணுச்சுன்னா, செய்."

"சோழ வம்சத்த சேந்தவன்றதுல உனக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா உன்னால ஏதாவது செய்ய முடியுன்றதுல எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.

மற்ற மூவரும் அவரைப் பார்த்துக் கொண்டே நின்றனர். அவர்கள் தலைக்கு மேலே சோழன் கனவில் தோன்றிய காட்சி ஒன்று சிற்பமாக நின்றது. சீதை, லட்சுமணனோடு ராமன் நிற்க, மார்க்கண்டேயர் அவர்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்.1987 - இரண்டு வருடங்களுக்குப் பிறகு
-------------------------------------------------

** ஐ. நா.வின் மனித உரிமைக் கழகம் இலங்கையில் அமைக்கப்பட்டது.

** "The great living Cholas" என்ற பெயரில் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், தஞ்சை கோயில்கள் "UNESCO world heritage" தலங்களுள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டன.

--
Post-script: After I wrote this article, my sister shared the link to an article written by her in 'The Hindu'. You may be interested to read this article about history based fiction.

9 comments:

TC said...

Nice blog and pictures Bhupy ..Merci much for leading us thru this wonderful journey .. Mazel Tov and Happy New year :))

Bonne Année !

Unknown said...

பூபி!
அருமையான பதிவு. பொன்னியின் செல்வனை வாசிக்காமல் சோழர் புனைவு எழுதி என்னைப் பொறாமைப்பட (பெருமைப்படவும்) வைத்துவிட்டாய். இந்தப் பதிவில் எந்த இடத்திலும் கல்கி எனக்குத் தெரியவில்லை; அவர் நினைவே வரவில்லை. கல்கியின் பல்லவர்களும் சோழர்களும், சாண்டில்யனின் பாண்டியர்களும் மட்டுமே தமிழ் மன்னர்களின் வாழ்வு எல்லைகளாகவும், தமிழக வரலாற்றின் குடம் நிறைந்து விட்டதாகவும் நினைத்துக் கொண்டிருக்கும் என் போன்ற சிலருக்குத் தோணி கொடுத்துள்ளாய்.
-சுபி

Banupriya said...

I really love reading this type of fiction. What is the name of this type of fiction in literature? The way you linked everything - kudos to ur imagination. Keep writing.

bhupesh said...

@TC - Thanks for being the first visitor to my blog this new year :)

@ சுபி - கல்கியையும் சாண்டில்யனையும் படித்திராத காரணத்தால் அவர்களின் தாக்கம் இல்லாதிருக்கலாம். அவர்களைப் படித்திருந்தால், தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, வரலாற்றைப் புனைந்து பார்க்கும் நம்பிக்கை வாராது போயிருக்கலாம்.மேலும், நீ கூறியது போல், கதை நடக்கும் காலகட்டம் வேறு. ஊக்குவிப்பிற்கு நன்றி.இந்த வலைப்பூவைப் புதிய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி .

@Banu - Thanks for your visit and wishes. I do not know enough to put this type of fiction into a particular genre. I tried google, but really could not find an answer. I would perhaps call it a historical fiction with a parallel plot.

Anonymous said...

அருமையான புனைவு...

அத்தியாயம் - 1 .. எனக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை நினைவுறுத்தியது. பிரதான அமைச்சர், ராஜ ராஜ சோழன், மதம் கொண்ட யானை, புத்த மேடம் என்று சில ஒற்றுமைகள். ராஜ ராஜ சோழன் யானைகள் பழகியவர் என்று புத்தகத்தில் சில கட்சிகள் வரும். அந்த புத்தகம் படிக்காமல் நீ இங்கே குறிப்பிட்டிருப்பது இன்ப ஆச்சர்யமே :)

ஒரேஒரு குறை. ராஜ ராஜ சோழன் என இங்கு குறிப்பிடப்படுவது இரண்டாம் ராஜ ராஜ சோழன். இதை நான் தாராசுரம் கோயில் விக்கிபீடியா பதிவு படித்து தெரிந்து கொண்டேன். முதலில் நான் படித்த போது முதலாம் ராஜ ராஜ சோழன் என யூகித்து குழம்பி போனேன். முதலாம் ராஜ ராஜ சோழனை தொடர்ந்து வந்தது ராஜேந்திர சோழன் என்பதால். வரலாறு மறந்து போனதால் வந்த பிழை :)

bhupesh said...

@Prem: நன்றி. நண்பா, ஓரிடத்தில் கதையில் வருவது இரண்டாம் ராஜ ராஜன் என்பதை கதையின் போக்கில் குறிப்பிட்டுள்ளேன். தவிர, வரலாற்றில் ஆர்வம் இருக்கும் நண்பர்கள் நிச்சயம் தாராசுரம் பற்றி இணையத்தில் மேற்கொண்டு படிப்பார்கள்.

முக்கியமாக, உன்னுடைய பின்னூட்டம் இப்போது அந்த பணியைச் செய்து விடும் :)

bala said...

Interesting work for a person like me who loves historical stories!! Among others, one thing which I feel surprised after reading this work was the way things are "correlated"-photos and events; characters and photos; facts and characters etc. It is done such as the flow of story is not disturbed. Another wonderful thing was the climax, which was well finished with an wonderful image and it seems that the characters of the story was crafted based on this image.
Thank viru for the suggestion. It made the difference between the both parts.

On the whole its a intrinsic work. Characters were aptly named. Historical facts were considered while writing. Well done!! Why cant you try "Airathil oruvan part II?"

bhupesh said...

Thanks for the detailed comments Bala.

It was difficult enough to create part 2 of the 'Great Living Chozhas' trip.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

முன்பே வாசித்து விட்டேன் நண்பா. புகைப்படங்களை இன்றுதான் பார்த்தேன். மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்ட கதையாக உணர்கிறேன்.